நாட்டில் தற்போது எரிபொருள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சில விற்பனை நிலையங்கள் எரிபொருளை மறைத்து வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இதன்படி, எரிபொருளை மறைத்துவைத்து விற்பனை செய்யும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் சோதனைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருளை மறைத்து வைத்துக்கொண்டு, நுகர்வோருக்கு வழங்காதுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் தலைவர், சுமித் விஜயசிங்க குறிப்பிட்டார்.