முல்லைத்தீவில் பகிரங்க வாகன ஏல விற்பனை ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரம், உழவு இயந்திரப் பெட்டிகள் உள்ளிட்டவையும், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் பகிரங்க ஏல விற்பனை நடைபெறவுள்ளது.
எனவே பகிரங்க ஏல விற்பனையில் பங்கு கொள்ள விரும்புவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்துக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.