ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சில அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் பணிகளில் திருத்தங்களை செய்துள்ளார்.
சில அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து ஜனாதிபதி நேற்று அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் முறையே 44 (1), 45 (1) மற்றும் 47 (1) (ய) (டி) ஆகியவற்றின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி திருத்தங்கள், 2022, பெப்ரவரி 23 முதல் அமுலுக்கு வருகின்றன.
வெளியுறவு அமைச்சர், சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர், நீதி அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் தேசிய முன்னுரிமை நிகழ்ச்சித் திட்டத்தில் கடமைகள் மற்றும் பணிகள் இந்த வர்த்தமானியின்படி திருத்தப்பட்டுள்ளன.