உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் ஐரோப்பிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அவர். பிரான்ஸ் உக்ரைனின் பக்கம் நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் ரஸ்யாவின் நடவடிக்கைகள் கண்டத்திற்கு “நீடித்த மற்றும் ஆழமான” விளைவுகளை ஏற்படுத்தும் என்று மெக்ரோன் எச்சரித்துள்ளார்
உக்ரெய்ன் மீதான இராணுவ படையெடுப்பின் தன்மை மற்றும் அதற்கான நியாயங்கள் குறித்து ரஸ்ய படைத்தரப்பு பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டுள்ளது.
உக்ரேனிய இராணுவத்தால் தாக்கப்படுவதாக ரஸ்யாவிடம் கூறிய டான்பாஸின் ரஸ்ய ஆதரவுடைய பிரிவினைவாதப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவே உக்ரைன் மீது அதன் தாக்குதல் ஆரம்;பிக்கப்பட்டதாக ரஸ்ய படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது.
தமது தாக்குதல்கள் “அதிக துல்லியமானவை” என்றும் இராணுவ உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைப்பதாகவும் அது கூறியுள்ளது
ரஸ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையிலேயே ரஸ்யாவின் இந்த கூற்று வெளியாகியுள்ளது
அத்துடன் உக்ரேய்னின் பெரிய விமான நிலையம் மீதும் ரஸ்ய ஏவுகணை தாக்தல் நடத்தப்பட்டுள்ளது.