மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும்.
இருப்பினும், இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது.
மாதவிடாய் உடலை மட்டுமல்லாமல், மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு படபடப்பு, கோபமான மனநிலை, எரிச்சல், பதட்டம் ஆகியவை ஏற்படும்.
எனவே, பெண்கள் சரியான உணவு திட்டத்தை பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் முக்கியமாக சாப்பிட வேண்டிய சில உணவுகளையும், அவர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
உப்பு மற்றும் காரமான உணவு
பொரித்த உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் உட்பட ரெடிமேட் தின்பண்டங்களில் உப்பு மற்றும் சோடியம் அதிகம் இருப்பதால் அவற்றைத் தவிர்க்கவும். “அதிகப்படியான உப்பை உட்கொள்வது நீரை தக்கவைத்துக்கொள்வதற்கு காரணமாகிறது, இது உங்கள் மாதவிடாய் காலத்தில் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது”. உண்மையில், காரமான உணவைத் தவிர்க்கவும், ஏனெனில் அது உங்கள் வயிற்றைக் குழப்பலாம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ்களை ஏற்படுத்தும்.
காஃபி
காஃபி தலைவலி மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. எனர்ஜி பானங்கள் போன்ற பானங்களைத் தவிர்க்கவும். இது செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
மது
மோசமான ஹேங் ஓவர் முதல் தலைவலி வரை ஆல்கஹால் உடலில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்
ஸ்வீட், கேக், ஐஸ்கீரிம் பானங்கள், இனிப்புகள். இவற்றை, நீங்கள் முழுவதுமாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், குறைவான அளவில் உண்ண வேண்டும்.
ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்குப் போதுமான அளவு ஓய்வு எடுப்பதும் முக்கியம். எனவே, உங்கள் மாதவிடாய் சுழற்சியின்போது, உடல் கழிவுகளின் இயக்கம் கீழ்நோக்கிய திசையில் இருப்பதால், அதிகப்படியான வேலை, பேசுவது, சிந்தனை, தாம்பத்தியம் அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் மாதவிடாய் சுழற்சியின் இயற்கையான ஓட்டத்தைத் தடுக்கலாம்.
இதுபோன்ற செயல்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதாலும், மாதவிடாய் நாட்களில் உங்கள் உடலுக்கு அதிக ஓய்வு தேவை என்பதாலும், இவற்றை தவிர்ப்பது நல்லது.