கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 70 பேர் மரணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 32 இலட்சத்து 65 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 36 ஆயிரத்து 323 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 15 ஆயிரத்து 885 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 736 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 ஆயிரத்து 480 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 31 இலட்சத்து 13 ஆயிரத்து 774 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.