உக்ரைய்னின் தலைநகர் கெய்வ் பிராந்தியத்தில் உள்ள வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய்க் கிடங்கு ஒன்று ரஸ்ய எறிகனை தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மணி நேரத்துக்கு முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
இந்த தாக்குதல் சம்பவத்தை நகரின் முதல்வர் நடாலியா பாலசினோவிச் மற்றும் அரசாங்க ஆலோசகர் என்டன் ஜெராசென்கோ ஆகியோர் உறுதிப்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன
சமூக ஊடகங்களில் உள்ள காட்சிகள்- பெரும் தீப்பிழம்புகள் எழுவதைக் காடடுகின்றன.