உக்ரைன் போர் முனையில் உக்ரைன் ஆயுதப்படைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை “ஒரு கடினமான நாளாக இருந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புக்கள் “கிட்டத்தட்ட எல்லா திசைகளிலும் இருந்து எறிகனை தாக்குதல்களை நடத்தியமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய அறிக்கைகளின் படி ரஷ்ய துருப்புக்கள் தெற்கு துறைமுகமான பெர்டியன்ஸ்கைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
எனினும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீதான ரஸ்ய தாக்குதலை எதிர்த்து போராடியதாகக் உக்ரைன் அறிவித்திருந்தது.




















