அஜித்தின் வலிமை படம் கடந்த வியாழக்கிழமை வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் ஈட்டிக்கொண்டிருக்கிறது. அஜித் பைக் ரேஸிங் தெரிந்த போலீஸ் அதிகாரியாக படத்தில் நடித்திருப்பது அஜித் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது.
சில நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் படத்தில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு நல்ல பாராட்டும் கிடைத்து வருகிறது. அஜித் ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் நடித்து இருப்பதற்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
மேலும் மூன்று நாட்களில் படம் 100 கோடி வசூலை தாண்டிவிட்டது என தகவல் இன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தை ரிசல்ட்டை ட்விட்டரில் அறிவித்துவிட்டார்.
வலிமைக்கு மீடியாக்களில் கிடைத்திருக்கும் ரேட்டிங் பற்றிய விவரங்களை வெளியிட்ட அவர் “It’s a hit!” என குறிப்பிட்டு இருக்கிறார்.
It’s a hit! The blockbuster #Valimai is ruling people’s hearts!🙌🏻🔥
Book your tickets to the nearest theatre.https://t.co/7ArAWvVyVOhttps://t.co/y4oozTwrtS#ValimaiInCinemas #AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @IVYProductions9 @innamuri8888 pic.twitter.com/xgeRlVihL4— Boney Kapoor (@BoneyKapoor) February 27, 2022




















