ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியில் சட்டவிரோதமாக கடற்சங்குகளை வைத்திருந்த 67 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 160 கடற்சங்குகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



















