யாழ் – நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிசந்தியில் வைத்து 50 கால் சாராய போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் கீழ் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களது குழுவினரால் நேற்று(05) இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது வரணியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், நீண்ட காலமாகத் தான் இவ்வாறு சாராயம் விற்பனை செய்வதாக வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



















