கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற 69 வயதான ´நெந்துன்கமுவே ராஜா´ எனும் யானை இன்று காலை உயிரிழந்துள்ளது.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் ´நெந்துன்கமுவே ராஜா´ உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
அதேவேளை நெந்துன்கமுவே ராஜா கடந்த முறை எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















