பேருந்து கட்டண மறுசீரமைப்பு குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆராய்ந்த பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் மற்றும் ஏனைய உதிரிப் பாகங்கள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமெனவும் மக்களுக்கு தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.