வவுனியாவில் மது போதையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது, வவுனியா, தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாகவுள்ள வீதியில் இடம்பெற்றதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாகவுள்ள வீதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக பெண் ஒருவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணை வைத்தியசாலை அழைத்துச் செல்ல முற்பட்ட போது குறித்த பெண் மது போதையில் விழுந்து கிடந்தமை தெரியவந்துள்ளதுடன், தொடர்ந்தும் குறித்த பெண் பொது போக்குவரத்துகு இடையூறாக விபத்தை ஏற்பத்தும் வகையில் வீதியில் நடமாடித் திரிந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு வந்த போக்குவரத்து பொலிஸார் குறித்த பெணணை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.