ஒருவருக்கு வயிற்றுப் புண்கள் வந்தால் வயிற்று வலி, வயிற்று எரிச்சல், இரத்தம் கலந்த வாந்தி போன்ற அறிகுறிகளை சந்திப்பார்கள்.
அல்சருக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அந்த புண் தீவிரமாகி வயிற்றில் துளையிட்டு நிலைமையை மோசமாக்கிவிடும்.
இப்போது அல்சர் இருந்தால் எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை கொள்வோம். சில உணவுகள் அல்சரை தீவிரமாக்கி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்
காபி – காபியில் உள்ள காப்ஃபைன் வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்கக்கூடியது. அல்சர் நோயாளிகள் காபி குடிக்கக்கூடாது.
பிரட் – அல்சர் நோயாளிகள் பிரட் சாப்பிட்டால் அது நிலைமையை மோசமாக்கும். எனவே பிரட்டை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வந்தால், உடனே அதை நிறுத்துங்கள்.
மாட்டிறைச்சி – அல்சர் இருப்பவர்கள் மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாது. மாட்டிறைச்சியில் கொழுப்பு மற்றும் புரோட்டீன் அதிகமாக உள்ளது.
ஆல்கஹால் – அல்சர் இருப்பவர்கள் ஆல்கஹால் குடிப்பது, விஷம் குடிப்பதற்கு சமம். ஏனெனில் ஆல்கஹால் செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்பதால், அதிகம் ஆல்கஹால் குடிப்பது வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே அல்சர் இருந்தால் ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள் – பால் பொருட்களில் கொழுப்பு அதிகம் உள்ளது. அல்சர் இருந்தால் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் பொருட்கள் வயிற்றில் உள்ள புண்ணின் நிலைமையை மோசமாக்கி, தொந்தரவு செய்யலாம்.
ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்க.. காலையில் இந்த உணவை கட்டாயம் சாப்பிடுங்க