பிரபல நடிகையான வித்யா பிரதீப் விஞ்ஞானியாகியுள்ள நிலையில், மகிழ்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
பிரபல நடிகை
தமிழில் பசங்க 2 மற்றும் அருண் விஜய் நடித்த தடம் ஆகிய படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப் (Vidya Pradeep). மேலும் நாயகி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகமாக மாறினார். இவர், தற்போது தான் டாக்டரேட் பெற்றுள்ளதையும், விஞ்ஞானியாகயும் ஆகியுள்ளதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்டெம் செல் பயாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளது ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரையுலகினருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கின்றது.
நெகிழ்ச்சியில் வித்யா கூறியது என்ன?
‘கடந்த பத்து வருடங்களாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் தான் நான் பணியாற்றி வந்தேன். நான் சென்னைக்கு எந்த காரணத்திற்காக வந்தேனோ அது நிறைவேறிவிட்டது.
தற்போது விஞ்ஞானியாகவும் ஆகிவிட்டேன். இதற்காக கடின உழைப்பு தீர்மானம் ஆகியவற்றை கொடுத்ததுடன் சில தியாகங்களையும் நான் செய்துள்ளேன்.
இப்படி ஒரு இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் எனக்கான பொறுப்பு இன்னும் அதிகரித்து இருப்பதாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பணியாற்றுவேன் என்று வித்யா பிரதீப் கூறியுள்ளார்.