யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 18 இந்திய (India) கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த 18 இந்திய கடற்றொழிலாளர்களும் நேற்று (03.12.2024) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அதன்பின்னர், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருசாந்தன் பொன்னுத்துரை, 18 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.