நாட்டில் நிலவும் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இன்று (04.12..2024) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.