கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளவோ தேவையில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் (18-03-2022), நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தரவேண்டிய தேவை உள்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுகின்றன.
பிரித்தானியாவிற்கு செல்லுபவர்கள் இனி பயண விவரங்களை சமர்ப்பிக்கவோ, கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளவோ தேவையில்லை.
பிரித்தானியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால், அதற்கு ஏற்றவகையில் கூடுதல் தேவைகள் இல்லாமல் குடும்பங்கள் பயண திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த நாட்டில் 86 சதவீதம் பேர் கொரோனா 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி விட்டனர். 67 சதவீதத்தினர் மூன்றாவது ‘டாப்-அப் பூஸ்டர்’ டோஸ் தடுப்பூசிகளை போட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.