சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டைக் கைவிட்டுவிட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு பயணமாக நேற்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நயினாதீவு ரஜமஹா விகாரை, நாவற்குழியில் அமைந்துள்ள விகாரை மற்றும் ஆரியகுளம் நாகவிகாரை ஆகியவற்றில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இரண்டாம் நாளான இன்று காலை 10.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சென்று வழிபாடுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரின் வருகையினை எதிர்த்துப் போராடவுள்ளதாக வேலன் சுவாமிகள் அறிவிருந்தார்.
அத்துடன் இன்றைய தினம் போராட்டத்திற்கு வருகை தந்திருந்த வேலன் சுவாமி உள்ளடங்கலான குழுவினர், மற்றும் முல்லைத்தீவிலிருந்து வருகை தந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள் இடைவழியில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் வாகனத்தை விட்டு கீழிறங்குவதற்கும் சிறிலங்கா காவல்துறையினர் தடுத்துள்ளனர்.
மேலும் நல்லூர் ஆலய சூழலைச் சற்றி காவல்துறையினர் மற்றும் விசேட அதிரப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தர்.
எனினும் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் ஆலயம் செல்லாது மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டினை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.