நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற அனைத்து வழிபாட்டு தலங்களும் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
வசதி படைத்த வழிபாட்டுத் தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால், எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் மாற்றத்தை காண முடியும் என சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.