ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இது தொடர்பில் குறித்த உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இரசாயன உர இறக்குமதியை தடை செய்வதற்கான ஜனாதிபதியின் தீர்மானம் கட்சியை அதிருப்தி அடையச் செய்திருந்தது, உர இறக்குமதி தடையானது தேயிலை கைத்தொழில் துறையை வெகுவாக பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் ஏனைய சில தீர்மானங்கள் தொடர்பிலும் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளை ஜனாதிபதி கண்டு கொள்வதில்லை எனவும் எனவே இது தொடர்பில் பிரதமரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சர்வகட்சி மாநாட்டினை பகிஸ்கரித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட சமூகத்தின் நலன்புரியை உறுதி செய்வதே கட்சியின் பிரதான நோக்கம் எனவும் அதனை எதற்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனவும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜீவன் தொண்டமான் ஜனாதிபதியை சந்திப்பார் எனவும் எதிர்பாக்கப்படுகிறது. மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே மலையகத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றது. அதில் வீடமைப்பு பிரச்சினையும் ஒன்றாகும் எனவே இவை தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.