சீனாவில் இருந்து 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் நாடு திரும்பிய சுமார் 5,000 இலங்கை மருத்துவ மாணவர்கள், தற்போது மீண்டும் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சீனாவில் கோவிட்-19 பரவியதில் இருந்து ஆறு வருட மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் வெளிநாட்டினர் வருவதை தடை செய்ததால் அவர்களால் சீனாவுக்கு திரும்ப முடியவில்லை.
இந்த மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவப் பயிற்சி பெற வேண்டும், ஆனால் சீனப் பல்கலைக்கழகங்கள் இந்த மாணவர்களை ஒன்லைன் பயிற்சியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.