நாட்டின் வங்கி முறைமை ஸ்திரமாக இருப்பதாகவும் அரச வங்கிகளின் செயற்பாடுகள் சீராக இயங்குவதாகவும் இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கும் அனைத்து பொறுப்புள்ள தரப்பினருக்கும் உறுதியளிக்கவுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
நாட்டில் வங்கி முறைமை தொடர்பில் வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் தவறானவை என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் வங்கி அமைப்பு மற்றும் அரச வங்கிகளுக்கும் இதே உத்தரவாதம் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை அரச வங்கியான மக்கள வங்கி வங்குரோந்து நிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை மக்கள் வங்கியின் தலைவர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.