நீரிழிவு நோய் என்பது ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும். இன்று பலரும் இந்த கொடிய நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதில் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் இன்சுலின் ஏற்ற இறக்கம் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாகிறது.
நீரிழிவு நோயின் அறிகுறிகள், அதிக தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுதல், மெதுவாக காயம் குணமாவது. மேலும், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, எடை ஏற்ற இறக்கங்கள், சோர்வு போன்றவை ஆகும்.
இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது சிறந்ததாகும். அந்தவகையில் தற்போது சர்க்கரை நோயை குறைக்க உதவும் சூப்பரான பானம் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புதிதாக தயாரிக்கப்பட்ட நெல்லிக்காய் ஜூஸ் – 4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 5-6
தயாரிக்கும் முறை
பரிந்துரைக்கப்பட்ட அளவு நெல்லிக்காய் சாறு, இலவங்கப்பட்டை தூள், கறிவேப்பிலை மற்றும் ½ கப் தண்ணீர் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் சேர்க்கவும். ஒரு பானத்தை உருவாக்க நன்றாக அரைக்கவும்.
இந்த சாற்றை, தினமும் காலையில், காலை உணவுக்கு முன் குடிக்கவும். இந்த பானத்தில் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்க வேண்டாம்.