பல பழங்கள், காய்கறிகள் அல்லது உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் அவை பல நாட்களுக்கு புதியதாக இருக்கும். ஆனால் சில பொருட்களை ஃப்ரிட்ஜில் வைப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும்.
பிரட்
பிரட்டை ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை. ஏனெனில் பிரட் அறை வெப்ப நிலையிலேயே நன்றாக இருக்கும். நீங்கள் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது காய்ந்து கெட்டியாகிவிடும். இதனால் அதன் சுவையும் மாறிவிடும்.
தேன்
தேன் பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் தேன் கெட்டு போய்விடுமோ என்ற பயத்தில் குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். ஆனால் தேனை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் தேனில் படிகங்கள் உருவாக தொடங்கும் என்பதால் இதை செய்யக்கூடாது.
உலர் பழங்கள்
பெரும்பாலான மக்கள் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கிருக்கிறார்கள். ஆனால் உலர்ந்த பழங்களை வெளியில் வைத்திருந்தாலும் பல மாதங்களானாலும் அவற்றிற்கு ஒன்று ஆகாது. குறிப்பாக சூரிய ஒளி அதன் மீது நேரடியாக படாத வகையில் குளிர்ந்த இடத்தில் வைத்தால் போதுமானது.