அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளரை பிரபல நடிகர் வில் ஸ்மித் அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கிய 94வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பெற்றுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.
ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
சிறந்த நடிகர்
இந்த நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டி சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை டிரைவ் மை கார் (Drive my car) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இந்த படத்தை யூசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) இயக்கி உள்ளார்.
மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர்
நடிகரும், ஆஸ்கர் விருது நிகழ்ச்சியும் தொகுப்பாளருமான கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் தனது மனைவியைக் குறிப்பிட்டு கிண்டல் அடித்ததால் கோபமடைந்த நடிகர் வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் பளேர் என அறைந்துள்ளார்.
இக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், குறித்த சம்பவம் நடிப்பு என்றும் கொமடிக்கு நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.




















