ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட தரப்பினர் தம்மை ஏமாற்றி சாப்பிட்டு நாட்டை அழித்து விட்டதாக ஜனாதிபதியின் இல்லத்தின் முன்னாள் போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
70 ஆண்டுகள் எமது தாய், தந்தையை ஏமாற்றி சாப்பிடடு விட்டு, தற்போது சிங்கள இனத்தவரை காட்டிக்கொடுத்து எம்மையும் ஏமாற்றி சாப்பிட்டனர்.
இப்போது மகிழ்ச்சியாக, சிங்களவர்களையும் முஸ்லிம்களை பிரித்து, சமூக புதைக்குழிக்குழிக்குள் புகைத்தைக்கும் வழியை ஏற்படுத்தியுள்ளனர்.
இப்படியான நாட்டில் நாங்கள் வாழ்கின்றோம், அதனை இல்லாமல் செய்து தாருங்கள். கோட்டாபய இந்த இடத்திற்கு வரவில்லை என்றால், இவர்களை போன்று 10 பேர் வருவார்கள் எம்மை ஆட்சி செய்வார்கள்.
அதனையே நிறுத்துவதற்கு வந்தோம். மீண்டும் சஜித் போன்றவர்களை ஆட்சிக்குகு கொண்டு வர வரவில்லை.அதனை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



















