அமைதியாக இருக்க விரும்புபவர்கள் கூட வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இலங்கையில் வசிக்கும் நியூசிலாந்து நாட்டவர்கள், எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகரகம்; இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் ஊரடங்கு உத்தரவு உட்பட அறிவுறுத்தல்களுக்கு இணங்க இலங்கையில் வசிக்கும் தமது நாட்டவர்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என்றும் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது,
எரிபொருள் மற்றும் சில உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
நீண்ட மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது, இந்த நிலைமைகள் இது சில காலம் தொடரும் என்று இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார்.