நாடளாவிய ரீதியில் வலுவடைந்துவரும் தொடர் போராட்டங்களின் தொடராக யாழ்.பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களாலும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
முன்னதாக யாழ்.பல்கலைக்கழக வாயிலில் திரண்ட சிங்கள மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோசம் எழுப்பியதுடன் பின்னர் பலாலி வீதி ஊடாக யாழ்.நகரை நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.
குறித்த போராட்டத்தில் சில தமிழ் மாணவர்களும் பங்குகொண்டுள்ளனர்.



















