நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் தொடர் மின் தடை நெருக்கடி காரணமாக புத்தாண்டு காலத்தில் மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட மின் பாவனையை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை,மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என நிலையான சக்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் அனல் மின் நிலையங்களின் சேவை தடைப்பட்டிருந்ததுடன், தொடர் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.