யாழ் – கைதடி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தொலைக்காட்சி பெட்டியை இயக்க முயன்ற பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (14) இடம்பெற்றுள்ளது.
வடக்கு கைதடிப் பகுதியைச் சேர்ந்த 59 வயதான கு.பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.