கடந்த புதன்கிழமையன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்ததாக கூறப்படும் ரஸ்யாவின் போர்க்கப்பல் மூழ்கிவிட்டதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சேதமடைந்த நிலையில் இருந்த ரஸ்ய கருங்கடல் கடற்படையின் முதன்மை கப்பலான மொஸ்க்வா, துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது, . கடல் சீற்றம் காரணமாக அது மூழ்கி விட்டதாக அமைச்சக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
510 பணியாளர்கள் கொண்ட ஏவுகணை கப்பலான மொஸ்கவா ரஸ்ய இராணுவ சக்தியின் அடையாளமாக இருந்தது,
உக்ரைன் மீது இந்த கப்பலில் இருந்த ரஸ்ய கடற்படையே தாக்குதல்களை நடத்தி வந்தது.
இந்தநிiலையில் கப்பல் உக்ரைன் ஏவுகணையால் தாக்கப்பட்டே சேதமடைந்ததாக வெளியான தகவல் தொடர்பில் ரஸ்யா இதுவரை பதில் வழங்கவில்லை.
இந்த தீயினால் போர்க்கப்பலின் வெடிமருந்துகள் வெடித்து சிதறியதாக ரஸ்யா கூறுகிறது,
எனினும் கப்பலில் இருந்த ஒட்டுமொத்த பணியாளர்களும் கருங்கடலில் உள்ள ரஸ்;ய கப்பல்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான ரஸ்ய படையெடுப்பின் முதல் நாளில், கருங்கடலில் உள்ள ஸ்நேக் தீவை பாதுகாக்கும் உக்ரேனிய எல்லைப் படையினரை, சரணடைய அழைத்ததன் மூலம் இந்த மொஸ்க்வா கப்பல் புகழ் பெற்றது.
எனினும் உக்ரைன் வீரர்கள், அந்த அறிவிப்புக்கு தமது மறுப்பை வெளியிட்டிருந்தனர்.
மொஸ்க்வா கப்பலில் 16 வொல்கன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் சுரங்க ஆயுதங்கள் என்பன இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உக்ரைன் தாக்குதல் காரணமாகவே இந்த கப்பல் மூழ்கியமை உறுதிசெய்யப்பட்டால், 12,490 தொன் எடையுள்ள மொஸ்க்வா கப்பல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எதிரிகளின் நடவடிக்கையால் மூழ்கடிக்கப்படும் மிகப்பெரிய போர்க்கப்பலாக இருக்கும்.




















