யாழ்ப்பாணத்தில் தனக்கு கைவிசேஷம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார்.
யாழ் -மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார்.
இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு கோரினார்.
இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை வருமாறு கோரியுள்ளார்,அப்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலால் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















