ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரை நினைவுகூறி காலி முகத்திடலுக்கருகில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் கையடக்கத் தொலைபேசிகளில் ஒளியினை எழுப்பி,ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்துள்ளனர்.
ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன்,ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



















