நாடு தழுவிய ரீதியில் விடுக்கப்பட்ட தொழில் சங்க போராட்டத்திற்கு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரும் கதவடைப்பினை மேற்கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நகரங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் மற்றும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர்கள் இன்று கடைகளைப் பூட்டி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து சங்கத்தினரும் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடுத்தாது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.