ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரை நான் நன்கு அறிவேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பண்டாரநாயக்க ஆட்சியின் போது மிகவும் நெருக்கடியான காலங்களில் கூட மக்களுக்கு எண்ணெய் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டது.
அங்கு உயிரிழந்த நபர் பவுசருக்கு தீ வைக்கும் நபர் அல்ல. அவரை நான் நன்கு அறிவேன்.
எனவே, இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை நாம் கண்டறிய வேண்டும். அனைத்து கட்சித் தலைவர்களும் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும். எமது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.