தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின்போது அவர்களுக்காக குரல் கொடுக்காத போதும் ரம்புக்கனையில் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழர்களும் சிங்கள மக்களுடன் இணைந்திருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்குகிழக்கில் தமது காணாமல் போன உறவுகளை தேடி, தாய்மார் ஆயிரத்து ஐநாறு நாட்களாக தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் அதற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதால் தற்போதைய போராட்டங்களுக்கு தமிழர்கள் ஆதரவளிக்காமல் இருக்கப்போவதில்லை என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்களி்ன்போது சிங்கள மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் தமிழர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.
இந்த அரசாங்கம் தமக்கு வாய்ப்பானவர்களுக்கு பொதுமன்னிப்பு மற்றும் விடுதலை பெற்றுக்கொடுத்துள்ளது.
எனவே இதுவரை கோட்டாபய ராஜபக்சவுடன் இதற்காக இணைந்திருந்தவர்கள் இனியாவது விலகிச்செல்லவேண்டும் என்றும சாணக்கியன் குறிப்பிட்டார்.
வடக்குகிழக்கில் இன்றும் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இன்றும் வடக்குகிழக்கில் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதாக சாணக்கியன் தெரிவித்தார்.