ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் ஜனாதிபதி பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதிக்கு எதிராக பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறியுள்ளது. மேலும், ஜனாதிபதி செயலகமும் முற்றுகையிடப்பட்டு தொடர்ந்தும் 12வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.