ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத்தரும் மக்கள் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன்,தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறித்த போராட்டத்திற்கு இலங்கையின் முக்கியஸ்தர்கள் பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,காலி முகத்திடல் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் போலி சடலங்களை உருவாக்கி வெள்ளை நிற ஆடை அணிந்து இரத்த கறையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.