“மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்.” என இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.
அத்துடன், ராஜபக்ச குடும்பமும் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும் எனவும் அவர் இடித்துரைத்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவள், குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இல்லாத சூழ்நிலையில்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன்.
அம்மா (ஶ்ரீமாவும்) அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என்ற உறுதிமொழியை எனக்கு வழங்கியிருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்பதால்தான் எனது மகனைக் கூட அரசியலில் இறக்கவில்லை. கோட்டாபய ராஜபக்சவால் முடியாது. எனவே, அவர் கௌரவமாகப் பதவி விலக வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.