இலங்கை, கோரிய அவசர நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்துள்ளது
இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் பொருளாதார திட்டங்களை முன்கொண்டு சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திடம் திட்டம் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு தற்காலிக வருமானத்தை ஈட்டுவதற்கான திட்டங்கள் குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில் பசில் ராஜபக்சவின் வரவுசெலவுத்திட்டம் மீளமைப்பு செய்யவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.