மாதுளம் பழம் சாப்பிடுவது என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
இந்த மாதுளம் பழத்தை நமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
பழமாக மட்டும் இல்லை தினசரி ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.
மாதுளம் எடையை குறைக்க எப்படி உதவும் ?
மாதுளை தொப்பையில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வெகு எளிதில் பசியை தூண்டாது.
எனவே அதிகப்படியான உணவை உட்கொள்வதில் இருந்து இது நம்மை கட்டுப்படுத்துகிறது
நமது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது நீண்ட நேரம் துவண்டு போகாமல் இருக்க இது உதவுகிறது.
மாதுளை ஜூஸ் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
ஒரு கப்மாதுளை பழம்
3 தேக்கரண்டி சர்க்கரை
அரை கப்தண்ணீர்
செய்முறை
மாதுளம் பழத்தை தோல் உரித்து, முத்து எடுத்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பானம் தயாராகி விடும்.
இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம்.
தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது.




















