ஓராண்டு தாவர வகையை சேர்ந்த காலிபிளவரின் தாவரவியல் பெயர் Brassica oleracea.
இதன் காம்பு மற்றும் இலைப்பகுதிகள் களையப்பட்ட பின்னர், பூப்பகுதி உட்கொள்ளத்தக்கதாக இருக்கும்.
இதனைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.
நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலிபிளவர், இதயநோய்கள், புற்றுநோய் உட்பட பல நோய்கள் வராமல் தடுக்கிறது.
உடல் எடை குறைப்புக்கும் முக்கிய பங்காற்றுவதால் கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.




















