வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளர்களுக்கு பல அசத்தலான அப்டேட்களை கொடுத்து வருகிறது.
அதன்படி அதிகாரப்பூர்வ காப்பரேட் சப்போர்ட் வலைப்பக்கத்தில் கேஷ்பேக் பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கிறது.
அதில், வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால், ரூ. 11 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல் பேமண்ட் சேவையை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
மேலும், குறைந்தபட்சம் 30 நாட்களாக பேமண்ட் சேவையை பயன்படுத்தி வருவோருக்கு மட்டும் இந்த சலுகையை வாட்ஸ்அப் முதற்கட்டமாக வழங்கி வருகிறது.
கூகுள் பே மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் போன்பே போன்ற சேவைகள் ஆதிக்கத்தை தகர்க்கவும், வாடிக்கையாளர்களை பிடிக்கவும் பல முயற்சிகளை கையாண்டு வருகிறது.