ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி தற்போது சுதந்திர சதுக்கத்தினை அடைந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் பிரதான மே தின கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் தற்போது சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்பொழுது கொழும்பு – கொலன்னாவை பகுதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கொலன்னாவை பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை கொழும்பு – டெம்பிள் மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.