இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 2021 இல் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாக மத்திய வங்கியின் 2021 வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) அரச நிறுவனங்களின் நிலுவைத் தொகை 2021 ஆம் ஆண்டளவில் 161.1 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டளவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடனில் 90.1 வீதத்தை இலங்கை மின்சார சபையும், (CEB) ஸ்ரீலங்கன் விமான சேவையும் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 33.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்த இலாபம் எதிர்மறையாக பாதிக்கப்படும் எனவும், 2021ஆம் ஆண்டில் 82.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் எனவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டளவில் வங்கித் துறையிலிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு 123.5 பில்லியன் ரூபாவிலிருந்து 505.3 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.