நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கல் மற்றும் றம்புக்கணயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து நேற்று (01) மேற்குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் கொழும்பு – காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டிக்கு மட்டும் வாகனங்கள் வரக்கூடியதாக உள்ளது. ஆனால் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி செல்லும் வீதி முடக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காலையில் இருந்ததைவிட அதிகமானதுடன் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.