முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடி பொருட்களானது நேற்று(30) மீட்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு ஆர்.பி.ஜி ரக குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.