தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு சில சந்தர்ப்பங்களில் வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும், அதனைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“நிதி அமைச்சரே, அவரரவருக்கு விருப்பப்படி செய்ய இடமளிக்க வேண்டாம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது 25 ஏர்பஸ்களை வாங்கியுள்ளது. நாம் இலங்கையின் பொருளாதாரத்தை பார்த்துவிட்டு அதன் பின்னர் பொருளாதாரத்திற்கு என்ன செய்வது என்று பார்க்க வேண்டும்.
குறிப்பாக, நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கும் வரையில் எந்தவொரு விமானத்தையும் வாங்க வேண்டாம் என ஸ்ரீலங்கனுக்கு தயவு செய்து தெரிவிக்குமாறு நிதி அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். வங்கிகளைப் பாதுகாக்கவும்.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை என்ன செய்வது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. 2020 – 2021ல் எண்ணெய் விலை குறையும் போது தனி நிதியம் அமைக்கப்படும் என்று அப்போது எமக்கு கூறினர்.
அந்த நிதியத்தில் பணம் இருக்கிறதா? இல்லையென்றால் அந்த அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். அதனால்தான் நாம் உங்களிடம் கேட்கிறோம்.
என்ன செய்வது என்று. நீங்கள் சொன்னதை விட இன்னும் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெளிநாடுகளின் உதவியை நாடினால் அந்த நாடுகளுடனான பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும்.